ஆரணி அருகே பெட்டிக்கடையில் மதுபானம் விற்றவர் கைது
ஆரணி அருகே பெட்டிக்கடையில் மதுபானம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.;
ஊரடங்கு நேரத்தில் ஆரணி - சேத்துப்பட்டு சாலையில், சித்தேரி கூட்ரோட்டு அருகில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆரணி தாலுகா போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அங்கு ஏராளமான மதுபான பாட்டில்களை பதுக்கி விற்றது தெரிய வந்தது.
இதுதொடர்பாக, பெட்டிக்கடை உரிமையாளர் செல்வம் (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பீர் பாட்டில்கள், 180 மில்லி கொண்ட 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.