ஆரணியில் சொந்த நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கியவருக்கு பாராட்டு

ஆரணியில் தனது சொந்த நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கியவருக்கு கோட்டாட்சியர் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2024-01-24 02:36 GMT

தனது சொந்த நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கியவருக்கு  பாராட்டு தெரிவித்த கோட்டாட்சியர் 

ஆரணி அருகே பள்ளியின் தரத்தை உயர்த்த சொந்த நிலத்தை விவசாயி தானமாக வழங்கினார். தனது சொந்த நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கியவருக்கு கோட்டாட்சியர் பாராட்டு தெரிவித்தார்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அரிய பாடி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் கோபு. இவருக்கு ஜனா என்ற மனைவியும் மூன்று மகன்கள் உள்ளனர்.

அரியப்பாடி கிராமத்தில் இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 250 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பொதுமக்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக முயற்சி செய்து வந்துள்ளனர் .

இந்நிலையில் பள்ளி கட்டிட விரிவாக்க பணிக்கு போதிய இடம் இல்லாததை அறிந்த விவசாயி கோபு பள்ளிக்கு அருகாமையில் உள்ள தனக்கு சொந்தமான ஐந்து சென்ட் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்குவதாக கூறினார். கோபுவின் நற்செயலை கேட்டு அறிந்த ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விவசாயி கோபுவை நேரில் வரவழைத்து சால்வை அணிவித்து பாராட்டி கௌரவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோபு,

அரியபாடி அரசு பள்ளியில் தரம் உயர்த்த பள்ளிக்கு மேம்பாடு பணிகள் மேற்கொள்ளவும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் தனது 20 லட்சம் மதிப்புள்ள 5 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியதாக கூறினார். கோபுவின் இச்செயலை கண்டு ஊர் பொதுமக்கள், மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள், பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மஞ்சுளா, முனைவர் பழனி ,அப்துல் கலாம் பசுமை இயக்கத்தினர், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News