ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளி சார்பில் மாநில கராத்தே போட்டி: எம்.எல்.ஏ. துவக்கி வைப்பு
ஆரணியில் ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டியை எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.;
கராத்தே போட்டியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன்.
ஆரணியில் ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. ஆரணி கோட்டை மைதானத்தில் கராத்தே மாஸ்டர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியை ஆரணி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
கராத்தே போட்டியில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சியாளர்கள், நடுவர்கள், நகர மன்ற துணைத் தலைவர் பாரி பாபு, நகரமன்ற உறுப்பினர்கள், கராத்தே பள்ளி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், ஆர்வத்துடன் பங்கேற்ற கராத்தே வீரர்களை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளி நிர்வாகிகள், கராத்தே பயிற்சியாளர்கள் செய்திருந்தனர். இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் பள்ளி நிர்வாகிகளுக்கும் தமது பாராட்டுக்களை தெரிவித்தார்.