ஆரணி அருகே பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு: போலீசார் விசாரணை
ஆரணி அருகே பூப்பறித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் நகைகளை பறித்தச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் உசேல் தெருவை சேர்ந்தவர் காசிநாதன். அவரது மனைவி கவுாி (வயது 65). இவர், வீட்டின் முன்பு உள்ள செடியில் பூக்களை பறித்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென கவுரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். அப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்த கவுரிக்கு காயம் ஏற்பட்டது.
பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் தருமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.