கருணாநிதிக்கு சிலை வைக்க நகரமன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
ஆரணி நகரமன்ற கூட்டத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்க பெண் கவுன்சிலர் கோரிக்கை வைத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியில் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் என்ஜினீயர் விஜயராஜ காமராஜ் அனைவரையும் வரவேற்றார். நகர மன்ற துணைத் தலைவர் பாரிபாபு நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கினார். மேலும் இதில் திமுக காங்கிரஸ் மதிமுக விடுதலைசிறுத்தை அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இதில் 20வது வார்டு பெண் கவுன்சிலர் ரேவதி பேசுகையில், ஆரணி டவுன் மைய பகுதியில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சிலையை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து பள்ளிகளில் காலை உணவு திட்டம் வரவேற்பு பெற்றுள்ளதால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இரவின் நிழல் திரைப்படத்தினை ஆரணியில் உள்ள திரைய ரங்கங்களில் திரையிடபடும் போது கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 39 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆரணி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் ஓக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆற்காடு பாலாற்றிலிருந்து ஆரணி பைப் லைன் வழியாக குடிநீர் வருவதற்கு அடிக்கல் நாட்டினார்கள்.
தற்போது அந்த திட்டம் நிறைவேற்றபட்டு தினமும் ஆரணி நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் 45 லட்சம் லிட்டர் தண்ணீர் வரவழிவகை செய்யபட்டுள்ளன. ஆனால் கூட்டு குடிநீர் திட்டத்தில் ஆரணி நகருக்கு குடிநீர் வேண்டாம் என ஆரணி நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக வேலூர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமசந்திரன் ஆரணி நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து நகராட்சி ஆணையர் தமிழ்செல்வியிடம் முறையிட்டார். காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் வேண்டாம் என்று அதிகாரிகளில் அலட்சியமாக சொல்லி இருக்கின்றனர் அதிகாரிகள் அலட்சியமாகவும் மெத்தனமாகவும் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
40 லட்சம் லிட்டர் குடிநீர் நாளை முதலே விநியோகம் செய்யபடும் இதனை அதிகாரிகள் தடுப்பதாகவும் ஆரணி அதிமுக எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் தெரிவித்தார். குடிநீர் தேவை என்று ஆணையர் கடிதம் அளிக்க வேண்டும் கொடுத்த கடிதத்தை நானே நேரில் சென்று வேலூர் நீரேற்று நிலைய அதிகாரியிடம் அளிக்கின்றேன் என்றும் தெரிவித்தார். கமிஷனர் கடிதம் அளிப்பதாக கூறினார்.
மேலும் சூரியகுளத்திற்கு 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஓதுக்கபட்டு தற்போது கிடப்பில் உள்ளன என அடுக்கடுக்கான புகாரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் எடுத்து வைத்தார்.
இதில் அ.தி.மு.க. நகரமன்ற துணை தலைவர் பாரிபாபு கவுன்சிலர்கள் நகர மாணவரணி செயலாளர் குமரன் நகர செயலாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.