ஆரணியில் புதிய அறிவுசார் மையம் நூலக கட்டிடம் திறப்பு
ஆரணியில் புதிய அறிவுசார் மையம் நூலக கட்டிடம் அமைச்சர் திறந்து வைத்தார்.
ஆரணியில் புதிய அறிவுசார் மையம் நூலக கட்டிடம் அமைச்சர் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சியில் ஒரு கோடியே 88 லட்சம் மதிப்பீட்டின் நூலக கட்டிடம் மற்றும் அறிவு சார்ந்த மையம் திறப்பு விழா திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஆரணி நகர மன்ற தலைவர் மணி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ. வேலு பங்கேற்று குத்து விளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு நூலகத்தை திறந்து வைத்தார்.
மேலும் இந்த நூலக கட்டிடத்தில் இணையதள வசதி, தரைதள கட்டிட அரங்கம், பத்துக்கு மேற்பட்ட கணினிகள், தொடுதிரையுடன் கூடிய ப்ரொஜெக்டர் வசதி, போட்டி தேர்வுக்கு மாணவ மாணவிகள் தயாராக அதற்கான வழிகாட்டி புத்தகங்கள், குடிநீர் வசதி, கழிவறை வசதி, முற்றிலும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி ,ஆரணி பேரூராட்சி தலைவர் பச்சையம்மாள், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கார்த்தி ,மாவட்ட கவுன்சிலர் அருணா, வட்டாட்சியர் மஞ்சுளா, நகராட்சி ஆணையர் குமரன், நகராட்சி பொறியாளர் உமாமகேஸ்வரி, நகர மன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், அரசுத்துறை அதிகாரிகள், நூலகர்கள், வாசகர் வட்ட உறுப்பினர்கள்,மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.