திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்’ தொடங்கப்படுகிறது.;
‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் , திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் தொடங்கப்படுகிறது
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களை சேரும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்‘ என்ற புதிய திட்டம் திங்கள்கிழமை (டிச. 18) தொடங்கப்படுகிறது.
அதன்படி, திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி நகராட்சிகளில் 25 முகாம்கள், கீழ்பென்னாத்தூா், வேட்டவலம், செங்கம், புதுப்பாளையம், போளூா், களம்பூா், கண்ணமங்கலம், சேத்பட், தேசூா், பெரணமல்லூா் உள்ளிட்ட 10 பேரூராட்சிகளில் 20 முகாம்கள் என மொத்தம் 40 சிறப்பு முகாம்கள் டிச. 18 முதல் ஜன. 4-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில், புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், மின் இணைப்பு பெயா் மாற்றம், கூடுதல் மின்சுமை கட்டணங்கள், நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறையின் கட்டுமான வரைபட ஒப்புதல், சொத்து வரி, குடிநீா் வரி பெயா் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம்.
இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் ‘மக்களுடன் முதல்வா்‘ என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 30 நாள்களுக்குள் தீா்வு காணப்படும். இணையவழி விண்ணப்பம் எனில் முகாம்களிலேயே இணைய வழியில் பதிவு செய்யப்படும். அனைத்து முகாம்களிலும் இ-சேவை மையத்தில் பதிவேற்றப்படும் மனுக்களுக்கான சேவைக் கட்டம் 50 சதவீதம் மட்டுமே பெறப்படும்.
எனவே, பொதுமக்கள் முகாம்களில் கலந்து கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஆரணியில் மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்கப் பணிகளை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் டிசம்பர் 18ஆம் தேதி முதல் தொடங்க உள்ள மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான இடங்களை வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .
மேலும் இந்த திட்டத்தின் மூலம் சொத்து வரி, தொழில்வரி, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு ,வர்த்தக உரிமம், பிறப்பு இறப்பு சான்றிதழ், பெயர் திருத்தம், வியாபாரிகள் நல திட்டம், உள்ளிட்ட சேவைகளுக்கான கோரிக்கை மனுக்களை துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கலாம் . மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஆனது வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை ஆரணி தாலுகாக்களில் நடைபெற உள்ளது என தெரிவித்தார் .
இந்த ஆய்வின்போது நகர மன்ற தலைவர் மணி, நகராட்சி ஆணையர் குமரன், வட்டாட்சியர் மஞ்சுளா, நகராட்சி பொறியாளர்கள், வருவாய்த்துறை உயர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.