சேத்துப்பட்டு ஒன்றியத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவக்கம்
சேத்துப்பட்டு ஒன்றியத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை ஒன்றிய குழுத்தலைவர் மருந்து மாத்திரைகளை வழங்கி துவக்கி வைத்தார்.
தமிழக அரசு சார்பில் கிராமங்கள்தோறும் பொது மக்கள் வசிக்கும் இடத்திற்கு மருத்துவர்கள் சென்று ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து மருந்து, மாத்திரைகள் வழங்குவதற்காக மக்களை தேடி மருத்துவ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
சேத்துப்பட்டு ஒன்றியத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சேத்துப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வட்டார தலைமை மருத்துவர் மணிகண்ட பிரபு தலைமை தாங்கினார். மருத்துவ குழுவினர் செம்மியமங்கலம் ஊராட்சியில் நோயாளிகளை கண்டறிந்தனர்.
இந்த நோயாளிகளுக்கு ஒன்றிய குழுத்தலைவர் ராணி மருந்து மாத்திரைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜன், மருத்துவர் கோமதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.