10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் செய்ய சிலை வடிவமைப்பாளர்கள் கோரிக்கை

களிமண் உள்ளிட்ட மூலபொருட்கள் விலை தற்போது உயர்ந்துள்ளதால் சிலைகள் விலை தற்போது 10 சதவீதம் முதல் 20சதவீதம் விலை உயர்வுக்கு வாய்ப்புள்ளன.

Update: 2022-08-20 01:00 GMT

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் சிற்பக் கலைஞர்கள்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்று. இந்த விழாவின் போது நாடு முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் அவை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோன காலத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடை விதிக்கபட்டது. தற்போது 2ஆண்டுகள் கழித்து இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில்  விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் முள்ளிபட்டு கண்ணமங்கலம் ஓண்ணுபுரம் கொளத்துர் குன்னத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் சிலை வடிவமைப்பாளர் தொழிலை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இதில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட தடை விதித்தன. 

தற்போது கொரோனா தடை தளர்வு செய்து இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி கோலகலமாக கொண்டாட உள்ளனர். தமிழகம் மட்டுமட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக, மும்பை, கல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் விநாயகர் பண்டிகை கொண்டாடுவார்கள்.

சிலை வடிவமைப்பு தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிலை விற்பனை அமோக நடைபெறும் என்றும் நம்பி விநாயகர் சிலையை செய்து வருகின்றோம். விநாயகர் பண்டிகை கொண்டாட அனுமதி வழங்கிய தமிழக அரசு 10அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும். எங்களிடம் விநாயகர் சிலை 15 அடி 20அடி சிலைகள் செய்ய பொதுமக்கள் ஆர்வத்துடன் ஆர்டர் வழங்கி வருகின்றனர்.

விநாயகர் சிலை செய்ய களிமண் உள்ளிட்ட மூலபொருட்கள் விலை தற்போது உயர்ந்துள்ளதால் சிலைகள் விலை தற்போது 10 சதவீதம் முதல் 20சதவீதம் விலை உயர்வுக்கு வாய்ப்புள்ளன. உடனடியாக தமிழக அரசு 10அடிக்கு மேல் விநாயகர் சிலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் சிலை வடிவமைப்பாளர் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளதால் சிலை வடிவமைப்பாளர்கள் நலவாரியம் அமைத்து வாழ்வதாரம் மேம்படுத்த தமிழக அரசு உதவ வேண்டும் என்று சிலை வடிவமைப்பாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News