குடும்ப பிரச்சினையால் கணவன் மனைவி தற்கொலை
Latest Suicide News -ஆரணி அருகே குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
பைல் படம்.
Latest Suicide News -திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டிணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 45). விவசாயியான இவர் கிராமத்தில் பயிர் சாகுபடி செய்து வந்தார். ஆரணி பெரிய கடைத்தெருவில் தங்க நகை அடகு வியாபாரமும் செய்து வந்தார். இவருடைய மனைவி மரகதம் (43). இவர்களுக்கு ஜெயஸ்ரீ (22), கோபி (17) என்ற பிள்ளைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினையில் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் அவர்களுக்கிடைய மீண்டும் தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த மரகதம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆரணி தீயணைப்புத் துறையினர் வந்து சடலத்தை மீட்டனர். மனைவி இறந்து விட்டதை அறிந்த குமார் நேற்று இரவு விஷமருந்தி வீட்டில் மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குமார் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆரணி கிராமிய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மரகதம் , குமார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஆரணி தாசில்தார் பெருமாள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2