பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வாருடனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் சிறுவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட விடுதி வார்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 2 லட்சம் அபராதமும் விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை மகன் துரைபாண்டியன், எம்ஏ பிஎட் பட்டதாரியான இவர் சேத்துப்பட்டு அடுத்த தச்சம்பாடி கிராமத்தில் அவரது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி, குழந்தையும் இருக்கின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பத்தியாவரம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வார்டனாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் விடுதியில் தங்கி இருந்த சிறுவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சிறுவர்களை எழுப்பி, மிரட்டி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுவதை இவர் வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 12.3.2022 அன்று அந்த விடுதியில் தங்கி இருந்த மூன்று சிறுவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட விடுதி வார்டன் துரை பாண்டியன் முயற்சித்தாராம்.
மேலும் இது குறித்து வெளியில் சொன்னால் விடுதியை விட்டே வெளியேற்றி விடுவேன் என அந்த மாணவர்களை அச்சுறுத்தியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்துள்ளனர் அதன் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் போது விடுதிவார்டன் சிறுவர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் மேலும் சிறுவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட விடுதி வாடன் துரைப்பாண்டியனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தரப்பில் அரசு சிறப்பு பொது வழக்கறிஞர் ஆஜரானார் வழக்கை விசாரிக்க நீதிபதி பார்த்தசாரதி சிறுவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட விடுதி வார்டன் துரை பாண்டியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்ட துரை பாண்டியன் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.