திடீர் உயர்மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதம்
திடீர் உயர்மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதம்;
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் அம்மாபாளையம் கிராமத்தில் திடீரென்று உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது. இதனால் முன்னூறு வீடுகளில் 500க்கும் மேற்பட்ட பொருட்கள், டிவி, பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் எரிந்து பழுதடைந்தது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் பழுதடைந்த பொருட்களை மின்வாரிய அலுவலகத்தில் வைத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். டிரான்ஸ்பார்மரை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.