ஆரணியில் கனமழை: அங்கன்வாடிக்குள் புகுந்த மழை நீர்
ஆரணியில் பெய்த கன மழையால் அங்கன்வாடிக்குள் புகுந்த மழை நீரால் குழந்தைகள் அவதிக்குள்ளாகினர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து. பின்னர் மாலை நேரத்தில் மழையும் பெய்து வந்தது. இதே போல் நேற்று முன்தினம் மாலை கருமேகங்கள் சூழ்ந்து சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் இந்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் கரைபுரண்டோடியது. இந்த மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்ததால் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கபட்டன. புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக ஆரணியில் 60.8 மி.மீ.மழை பதிவானது.பெய்த கனமழையின் அளவு 60.8 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளன.
இதுதவிர, திருவண்ணாமலையில் 8, செங்கத்தில் 26.4, போளூரில் 20, ஜமுனாமரத்தூரில் 37, கலசப்பாக்கத்தில் 10, தண்டராம்பட்டில் 14.2, செய்யாற்றில் 48, வந்தவாசியில் 54, கீழ்பென்னாத்தூரில் 9, வெம்பாக்கத்தில் 28, சேத்துப்பட்டில் 19 மில்லி மீட்டா் மழை பதிவானது.
அங்கன்வாடியில் மழைநீா்
ஆரணியை அடுத்த அடையபலம் கிராமத்தில் பலத்த மழை காரணமாக அங்கன்வாடியில் மழைநீா் புகுந்ததால் குழந்தைகள் அவதிப்பட்டனா்.
ஆரணி பகுதியில் புதன்கிழமை இரவு வியாழக்கிழமை காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.
ஆரணியை அடுத்த அடையபலம் கிராமத்தில் அங்கன்வாடி பள்ளி உள்ளது. ஆரணி பகுதியில் பெய்த கன மழையால் அங்கன்வாடியில் மழை நீா் புகுந்தது. வகுப்பறையில் தண்ணீா் நிரம்பியதால், நேற்று வியாழக்கிழமை காலை வழக்கம்போல் அங்கன்வாடி மையத்திற்கு வந்த குழந்தைகள் அமர முடியாமல் தவித்தனா்.
தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு மழை நீா் வெளியேற்றப்பட்டது.
இதுகுறித்து ஊராட்சி தலைவா் அசோக் குமார் கூறுகையில்,
அங்கன்வாடி கட்டடம் பழமையானது. புதிய கட்டடம் கட்டுவதற்கு வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். இந்த அங்கன்வாடியில் 35 குழந்தைகள் பயின்று வருகின்றனா். மேலும் தற்போது மீண்டும் மனு அளித்துள்ளோம், இதன்பின் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்றால் இப்பகுதி மக்களை அழைத்துச் சென்று மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்க உள்ளோம் எனக் கூறினார். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி உடனடியாக அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தை தற்சமயம் தற்காலிகமாக சீர் செய்தும் புதிய கட்டிடமும் கட்டி தர வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், அடையபலம் கிராமத்தில் இருந்து சேவூா் வழியாக ஆரணிக்குச் செல்லும் சாலை சரியில்லாத காரணத்தால் மழைநீா் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதற்கு சாலை வசதியும் கேட்டும் கோரிக்கை கோரிக்கை வைத்துள்ளனர்.