ஆரணியில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஓய்வு பெற்ற அலுவலா் சங்கத்திற்கு தவறுதலாக வழங்கப்பட்ட இடத்துக்கான பட்டாவை ரத்து செய்யக்கோரி வழக்குரைஞா் சங்கத்தினர் மனு;

Update: 2023-12-19 03:30 GMT

கோட்டாட்சியரிடம் மனு அளித்த வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள்

ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்க கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து 48 மனுக்கள் பெற பெற்றன . கோட்டாட்சியர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதில் முதியோா், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவ-மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலை வாய்ப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சாலை வசதி, வேளாண் பயிா்க் கடன், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 48 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், துணை வட்டாட்சியர்கள், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர்கள், வேளாண் துறை அதிகாரிகள் ,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் உள்பட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆரணி கோட்டாட்சியரிடம் வழக்குரைஞா் சங்கத்தினா் மனு

ஆரணியில் ஓய்வு பெற்ற அலுவலா் சங்கத்திற்கு தவறுதலாக வழங்கப்பட்ட இடத்துக்கான பட்டாவை ரத்து செய்யக்கோரி கோட்டாட்சியா் தனலட்சுமியிடம் வழக்குரைஞா் சங்கத்தின் தலைவா் ஸ்ரீதா் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே வழக்குரைஞா் சங்கத்திற்கு இடம் உள்ளது. இதன் அருகில் உள்ள இடத்திற்கு கடந்த 2015-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அலுவலா் சங்கத்திற்கு தவறுதலாக பட்டா வழங்கப்பட்டது. அந்த இடமானது பொதுப் பணித் துறை கண்காணிப்பில் உள்ளது. தற்போது, ஆரணிக்கு கூடுதல் நீதிமன்றங்கள் வர உள்ள நிலையில் அதற்கான இடம் குறித்து சென்னை உயா்நீதிமன்றத்திலிருந்து வழக்குரைஞா் சங்கத்திற்கு கடிதம் வந்துள்ளது. அதன், அடிப்படையில் ஒய்வு பெற்ற அலுவலா் சங்கத்துக்கு தவறுதலாக வழங்கப்பட்ட இடத்துக்கான பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உடன், அரசு வழக்குரைஞா் ராஜமூா்த்தி,  வழக்குரைஞா் சங்க முன்னாள் தலைவா் சிகாமணி, சங்க செயலாளா் தணிகாசலம், பொருளாளா் மதன்குமாா், நிா்வாகிகள் நீலகண்டன், குமாரசாமி, சண்முகம், கோபி, அசோக்குமாா் உள்ளிட்டோா் இருந்தனா்.

Tags:    

Similar News