ஆரணியில் 10-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர் கூட்டம்
ஆரணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டம் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் வருகிற 10-ந் தேதி ஆரணி நகராட்சி சாலையில் உள்ள அரிமா சங்க சுகாதார வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் ஆரணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட ஆரணி, போளூர், ஜமுனாமரத்தூர், கலசபாக்கம் ஆகிய தாலுகா உள்ளடங்கிய மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.