செய்யாற்றில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.;
ஆரணி அருகே தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சிக்குட்பட்ட சாணாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் , விவசாயி. இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும் வெங்கடேசன் என்ற மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.
காளியம்மாளின் தாய் பவுனம்மாள் பேரன் வெங்கடேசனுக்கு 5 ஏக்கர் நிலமும், ஓட்டு வீடும் உயில் சாசனம் செய்து எழுதி வைத்துள்ளார்.
சிலகாலம் கழித்து காளியம்மாள் மரணம் அடைந்த நிலையில் பெருமாளிடம் வெங்கடேசன் மீது உள்ள சொத்தினை பிரித்து தருமாறு மகள்கள் கேட்டுள்ளனர்.
அதற்கு என் மீது தான் உயில் சாசனம் எழுதிக் கொடுத்துள்ளார். அதை யாருக்கும் தர முடியாது என வெங்கடேசன் கூறினார். மேலும் தனது ரெண்டரை வயது மகன் மீது உயில் சாசனம் எழுதி வைத்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெருமாள், வெங்கடேசனை தட்டிக் கேட்டு தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், 11.4.2013 அன்று வெங்கடேசன் தந்தை பெருமாளைத் தாக்கியும், தலையணையால் முகத்தில் வைத்து மூச்சுத் திணறல் ஏற்படுத்தி உயிரிழக்கச் செய்தார்.
இதுகுறித்து ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு ஆரணியில் உள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி கே.விஜயா தந்தையை கொலை செய்ததாக வெங்கடேசனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். அதில் வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பு கூறினார்.
அரசு பஸ் ஜப்தி
வந்தவாசியில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
சேத்துப்பட்டு பழம்பேட்டையைச் சேர்ந்த வேலு என்பவரின் மகன் விக்னேஷ் என்ற விக்னேஷ்குமார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தார். இதையடுத்து இழப்பீடு கோரி செய்யாறு சார்பு கோர்ட்டில் அவரது தாய் ஆதிலட்சுமி வழக்கு தொடுத்தார்.
இதில் ஆதிலட்சுமிக்கு ரூ.15 லட்சத்து 20 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதையடுத்து அரசு பஸ்சை ஜப்தி செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்தவாசி வழியாக இன்று சென்ற அரசு பஸ்சை வந்தவாசி கோட்டை மூலை அருகில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து செய்யாறு கோர்ட்டில் ஒப்படைத்தனர்.