ஆரணியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Ganesh Procession - ஆரணியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து் செல்லப்பட்டு பாறைகுளத்தில் கரைக்கப்பட்டது.

Update: 2022-09-05 01:21 GMT

ஆரணியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்.

Ganesh Procession -விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 31-ந் தேதி ஆரணியின் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன. கடந்த 5 நாட்களாக பூஜைகள் நடத்தி நேற்று விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

ஆரணியில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்து முன்னணி சார்பில் 15 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர். 5 ம் நாளான நேற்று விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக இந்து முன்னணி சார்பில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

அண்ணா சிலை அருகில் துவங்கிய ஊர்வலம் சத்தியமூர்த்தி சாலை பையூர் நான்கு வழி சாலை வழியாகச் சென்று பாறை குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நகர, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், பா.ஜ.க. நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பொறுப்பாளர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி இந்துக்கள் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது பலர் தெய்வங்களின் உருவங்களை வேடமிட்டும் ஊர்வலமாக சென்றனர், மேலும் சிவகன வாத்தியங்கள், நாதஸ்வரம், தாரை தப்பட்டை, வாண வேடிக்களுடன் ஊர்வலம் சென்றது.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். டிஎஸ்பிக்கள் சௌந்தர்ராஜன், ரவிச்சந்திரன் வெங்கடேசன் மற்றும் 6 இன்ஸ்பெக்டர்கள் 18 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 340 போலீசார் ஆயுதப் படையுடன் குவிக்கப்பட்டிருந்தனர். விநாயகர் சிலைகள் கரைக்கும் பாறைகுளத்தில் 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு துறை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

பாறைகுளத்தை ஊர்வலம் சென்றடைந்ததும் அங்கு ஒவ்வொரு சிலையாக கரைக்கப்பட்டத. ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்திலும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் பெரிய ஏரியில் கரைக்கப்பட்டன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News