வெயிலில் தாகம் தணிக்கும் பழச்சாறு

கோடை கால வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் பழவகைகள் மற்றும் கரும்பு சாறு மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2021-04-12 12:00 GMT

தமிழகத்தில் கோடைக்கால வெயில் தொடங்கிய நிலையில் வெளியே வந்து செல்லும் பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாக்க பழவகைகள் மற்றும் கரும்புச்சாறு மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை ஆரணி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கோடை கால வெயிலில் இருந்து தங்களை பாதுகாக்கவும் கடுமையான வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் வெப்பத்தை தணிக்கவும் தர்பூசணி, கிர்ணி, போன்ற பழவகைகள் மற்றும் கரும்பு சாறு மீது ஆர்வம் காட்டி அதனை தேடி வந்து வாங்கி அருந்தி வருகின்றனர்.

இதனால் தற்போது பழ வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் பழவகைகள் மீது பொதுமக்களுக்கு உள்ள ஆர்வம் வியாபாரிகள் மத்தியில் வரவேற்பை பெற்று, பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டிருந்த நிலையில் பொது மக்கள் யாரும் வெளியே வராததினால் தர்பூசணி பழங்கள் கடந்த ஆண்டு விற்பனை இன்றி அழுகி வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டிருந்தாலும் கடந்த ஆண்டை போல் இல்லாமல் இந்த ஆண்டு தளர்வு களுடன் கூடிய விற்பனைகள் நடைபெறுவதால் பல வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News