இருசக்கர வாகனங்கள் பறிமுதல் : நான்கு பேர் கைது..!

ஏழு இருசக்கர வாகனங்களை திருடியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-31 14:17 GMT

கோப்பு படம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வாகன திருட்டு நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தது.

அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையில் போலீசார் வி ஏ கே நகர், ஆற்றுப்பாலம், ஆற்காடு சாலை பகுதிகளில் வாகன தணிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆற்காடு பைபாஸ் சாலை வழியாக இரண்டு இரு சக்கர வாகனத்தில் நான்கு நபர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடிக்க தொடங்கியுள்ளனர்.

இதனை கவனித்த போலீசார் அவர்களை விரட்டி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம், அத்திந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன், ராமகிருஷ்ணன், விக்ரம், கோகுலகிருஷ்ணன் என்பதும் மேலும், அவா்கள் வந்த இரு சக்கர வாகனங்கள், ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் அவர்களிடமிருந்து ஏழு இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

27 டெட்டனேட்டா்கள், 115 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: இளைஞா் கைது

வேட்டவலம் அருகே 27 டெட்டனேட்டா்கள், 115 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த காட்டுமலையனுாா் கிராமத்தில் உரிய அனுமதி இல்லாமல் வெடி பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட குற்ற நுண்ணறிவுப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தில்  போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள ஏரிக்கரையில் டிராக்டா் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 27 டெட்டனேட்டா்கள், 115 ஜெலட்டின் குச்சிகளைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து கீழ்பென்னாத்துாரை அடுத்த பொன்னான்குளம் கிராமத்தைச் சோ்ந்த பச்சையப்பன் என்பவரை கைது செய்தனா்.

Tags:    

Similar News