கண்ணமங்கலம் பகுதியில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு
கண்ணமங்கலம் பகுதியில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.;
குடிநீர் தொட்டி அமைக்கும் இடத்தினை முன்னாள் அமைச்சர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பகுதியில் சந்தைமேட்டில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., பேரூராட்சி,சந்தைமேடு பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குடிநீர் குடிநீர்த் தொட்டி அமைப்பதற்காகவும் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய் பகுதிகளை பார்வையிட்டார்.
அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண்ணமங்கலம் பகுதியில் புதியதாக தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கு அரசாணை பெற்று தந்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
இதில் மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் கொளத்தூர் திருமால், ஆரணி வடக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு உறுப்பினர் இ.ஜெயபிரகாஷ், ஐடிவிங் மாவட்ட செயலாளர்.சரவணன், பேரூராட்சி உறுப்பினர்கள்,குமார், கமல்ராஜ், நிர்வாகி சிந்தியா செல்வம். மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.