இளம்பெண்ணை அவதூறாக பேசிய வனக் காவலர் கைது
இளம்பெண்ணை அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வனக் காவலர் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே பெரணமல்லூர் பகுதியில் வசித்து வரும் பழங்குடியின பெண் மற்றும் அவரது சகோதரி இருவரும் விறகு வெட்டும் கூலி வேலைக்காக வாழ்குடை கிராமம் காட்டுப் பகுதியின் வழியாகச் சென்றுள்ளனர். அப்போது ஆரணி சரக வன காவலர் செல்வராஜ் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவதூறாக பேசியுள்ளார்.
அவர் தொல்லை கொடுக்கும் காட்சிகளை அந்தப் பெண் தான் மறைத்து வைத்திருந்த செல்போனில் வீடியோ எடுத்து ஆதாரத்துடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வராஜை கைது செய்தனர். விசாரணையில் அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.