ஆரணி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அசைவ உணவகம் மற்றும் ஓட்டல்கள் ஆரணி உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்;
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சிறுமியின் அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடிர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆரணி டவுன் பஜார் வீதி மார்க்கெட் வீதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அசைவ உணவகம் மற்றும் ஓட்டல்கள் ஆரணி உணவு பாதுகாப்பு அதிகாரி கைலாஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் 15-க்கும் மேற்பட்ட அசைவ உணவகங்களில் ஆய்வு செய்து ஷவர்மர் போன்ற சிக்கன் சம்மந்தபட்ட உணவை பரிசோதனைக்காக பறிமுதல் செய்து ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளன.
இதனை தொடர்ந்து ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள பலசரக்கு கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு அதனை கைப்பற்றி தலா ஒரு கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.