ஆரணி பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் சோதனை
ஆரணியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஆரணி மற்றும் களம்பூர் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், உத்தரவின்படிஅரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்கிறார்களா என ஆரணி மற்றும் களம்பூர் திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் எழில் பிச்சை ராஜா ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலர் லோகேஷ் குமார் உள்ளிட்ட குழுவினர் பெட்டிக் கடைகளில் திடீர் சோதனை செய்தனர்.
ஆரணி பழைய பஸ் நிலையம் நகராட்சி கடையில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். ஏற்கனவே இந்த கடையில் சோதனை செய்தபோது தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. முதல் முறை என்பதால் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். தற்போது அதே பெட்டிக்கடையில் இரண்டாவது முறையாக நடந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்வது தெரியவந்தது. புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அபராதமாக ரூபாய் 10,000 விதித்து கடைக்கு சீல் வைத்தனர்.