ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்புத் துறையினர் செயல்விளக்க முகாம்
மேல் சீசமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்புத் துறையினரின் செயல்விளக்க முகாம் நடைபெற்றது.
ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆரணி தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் தீ விபத்து தடுப்பு குறித்து செயல்விளக்கம் நடத்தினர்.
தீவிபத்து ஏற்படும்போது எவ்வாறு பாதுகாப்பாக இருக்கவேண்டும், தீ சிறிதாக இருக்கும்போது அவற்றை எவ்வாறு அணைப்பது, வீட்டில் பயன்படுத்தபடும் கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்தால் காலி பெயிண்ட் டப்பா கொண்டு காற்று புகாதவாறு மூடுதல், ஈர கோணிப்பை போட்டுமூடுதல், தீயணைப்பான், சிலிண்டர் கையாளும் முறை பற்றி விரிவாக செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேமபிரியா, டாக்டர் பாபு, மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனைக்கு வந்து இருந்த நோயாளிகள் அவருடன் வந்திருந்த பெண்களும் பொதுமக்கள் இதனை பார்வையிட்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் எ.ஆனந்தன் நன்றி கூறினார்.