சேத்துப்பட்டு பகுதி உர விற்பனையாளர்கள் ஆய்வுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு உர விற்பனையாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது;
சேத்துப்பட்டு உர விற்பனையாளர்கள் ஆய்வுக்கூட்டம், வேளாண்மை துறை இணை இயக்குனர் மாரியப்பன்,கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு உர விற்பனையாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வேளாண்மைதுறை இணை இயக்குனர் மாரியப்பன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது அவர் வியாபாரிகளிடம், விவசாயிகளுக்கு யூரியா மற்றும் உரங்கள் வழங்கும் போது கண்டிப்பாக ஆதார் அட்டை இணைக்க வேண்டும். மேலும் விவசாயிகளின் கேட்கும் பொருள்களை மட்டும் வழங்க வேண்டும் , கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என அறிவுறுத்தினார். கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் உரக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் கணேசன், வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.