மடத்தின் சொத்து ஆவணங்களை தவறுதலாக பதிவற்றம் செய்ததை திருத்தி தர கோரிக்கை

பரதேசி கோவிந்தராஜ் சாமி மடத்தின் சொத்து ஆவணங்களை தவறுதலாக பதிவேற்றம் செய்ததை திருத்தி தர முள்ளிப்பட்டு கிராம மக்கள் கோரிக்கை மனு;

Update: 2022-05-03 02:14 GMT

ஆரணி முள்ளிப்பட்டு கிராம மக்கள், பரதேசி கோவிந்தராஜ்சாமி மட நிர்வாகிகள் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஆரணி முள்ளிப்பட்டு கிராம மக்கள், பரதேசி கோவிந்தராஜ்சாமி மட நிர்வாகிகள் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

ஆரணிைய அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தில் பரதேசி கோவிந்தராஜ் சாமி மடத்துக்கு சம்பந்தமான காலி இடம் உள்ளது. அந்த இடத்தை ஊர் மக்கள் மேற்பார்வையில் நிர்வாகிகள் நீண்டகாலமாக நிர்வாகித்து வருகின்றனர். அந்த மடத்துக்கு சொந்தமான இடத்தை ஏற்கனவே பழைய பெயரிலேயே ஆவணங்கள் உள்ளது.

வருவாய்த்துறையில் சமீபத்தில் கணினியில் பட்டா ஆவணங்கள் பதிவேற்றம் செய்தபோது தவறுதலாக வேறு ஒருவரின் பெயரில் பட்டா தட்டச்சு செய்யப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அந்தத் தவறை பயன்படுத்தி ஒரு சிலர் மடத்தின் நிலத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்க முயற்சி செய்வதாகவும், அதனை தடுக்க வேண்டுமென கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் பத்திரப்பதிவுத்துறை, மாவட்ட கலெக்டர், தமிழக முதல்வர் வரை புகார் மனுக்கள் அளித்த வண்ணம் இருந்து வருகின்றனர்

கடந்த நவம்பர் மாதம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் மூலமாக ஆரணி தாலுகா அலுவலகத்துக்கு பட்டாவில் பெயர் மாற்றம் செய்திட ஆவணம் அனுப்பியும் இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை. அதனை உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும் என  கூறப்பட்டுள்ளது.

மனு கொடுக்க வந்தபோது வருவாய் கோட்டாட்சியர் இல்லாததால் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் மூர்த்தியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News