கொங்கராம்பட்டு கூட்ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆரணி செல்லும் ரோட்டில் கொங்கராம்பட்டு கூட்ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Update: 2021-11-28 02:49 GMT

கொங்கராம்பட்டு கூட்ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே ஆரணி செல்லும் ரோட்டில் கொங்கராம்பட்டு கேட் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்து இருந்தனர்.  மேலும் இச்சாலையின் வடபுறம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கொங்கராம்பட்டு ஏரிக்கால்வாயில் கட்டிடம் கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

இதனால் கொங்கராம்பட்டு கூட்ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த சில நாட்களாக நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகள் குறித்து அளவிடும் பணிகள் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்த  ஆரணி நெடுஞ்சாலைத்துறை உதவி செயற் பொறியாளர் செந்தில்குமார் தலைமையில், ஆரணி தாசில்தார் பெருமாள் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறையினர் இணைந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். 

Tags:    

Similar News