இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: கண்ணமங்கலத்தில் மின்னழுத்த பாதை சீரமைப்பு
கண்ணமங்கலம் அருகே உயர் மின் அழுத்தம் காரணமாக வீட்டு மின் உபயோக பொருட்கள் பழுதடைந்ததை நமது இன்ஸ்டாநியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது;
இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: கண்ணமங்கலத்தில் மின்னழுத்த பாதை சீரமைக்கப்பட்டது
கடந்த வாரம் 23ம் தேதி கண்ணமங்கலம், சேத்துப்பட்டு இடைப்பட்ட கிராமங்களில் உயர் மின் அழுத்தம் காரணமாக பல கிராமங்களில் வீட்டு மின் உபயோக பொருட்கள் பழுதடைந்தது. இதன் காரணமாக கிராம பொதுமக்கள் மின்சார அலுவலகத்தில் புகார் செய்தனர். இதனை நமது இன்ஸ்டாநியூஸ் செய்தியாக வெளியிட்டு, மின்சார வாரியத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக பகுதிகளுக்குச் சென்று பழுதடைந்த மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பிகளை புதியதாக மாற்றி அந்த கிராம மக்களுக்கு மின்சாரம் தடையின்றி வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கு மின்சார வாரியத்திற்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.