ஆரணி அருகே பையூர் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல்
பையூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டார்;
ஆரணியை அடுத்த பையூர் ஊராட்சி தலைவராக ஏ.சரவணன், துணைத் தலைவராக இந்திரா இளையராஜா மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக, ஊராட்சி நிர்வாகத்தில், தலைவருக்கு, துணைத்தலைவர் ஒத்துழைக்காததால் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இணைந்து துணைத் தலைவரை மாற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அதன்பேரில் இன்று காலை பையூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவருக்கான தேர்தல் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரூபன் மனோகரன், ஊராட்சி தலைவர் ஏ.சரவணன் ஆகியோர் தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் பதவிக்கு சங்கீதா, ராஜேந்திரன் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.
இதில் ராஜேந்திரன் 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சங்கீதாவுக்கு 2 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. தேர்தலையொட்டி ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப் இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்