திருவண்ணாமலை மாவட்டத்தில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.;
தமிழக முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், செங்கம் சட்டமன்ற தொகுதிகளின் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது.
ஆரணி அருகே இ.பி.நகர் தனியார் மண்டபத்தில் தி.மு.க இளைஞர் அணி பயிற்சி பாசறை கூட்டம் இளைஞர் அணி அமைப்பாளர் எவரெஸ்ட் நரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், எம்.எல்.ஏ. எழிலன், எழுத்தாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.
இதில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தொடுதிரை மூலம் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் நகர மன்ற தலைவர் ஏசி மணி ஒன்றிய செயலாளர்கள் மோகன், துரை மாமது, அன்பழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஞ்சித், முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம், நகர அவைத் தலைவர் அக்பர், மாவட்ட பிரதிநிதி பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செங்கத்தில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறையில் திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் கொளத்தூர் மணி அவர்களும் சமூகநீதி என்ற தலைப்பில் பேராசிரியர் நிரஞ்சன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, இளைஞரணி துணை அமைப்பாளர் தனுசு, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறையில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் சுப வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு திமுக வரலாறு , திராவிட வரலாறு குறித்து சிறப்புரையாற்றினர்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் மாவட்ட இளைஞரணி சார்பில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை இன்று நடைபெறுகிறது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் திருவண்ணாமலையில் நாடாளுமன்ற உறுப்பினருமான அண்ணாதுரை தலைமையில் இப்பயிற்சி பாசறை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் குமரன் வரவேற்புரை ஆற்றுகிறார்.
ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் மாநில சுயாட்சி என்ற தலைப்பிலும், சொற்பொழிவாளர் சூரிய கிருஷ்ணமூர்த்தி திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பிலும் உரையாற்றுகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் சட்டம் மன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி வாழ்த்துரை வழங்குகிறார்.
மேலும் மாநில திமுக மருத்துவரணி துணைத் தலைவர் எ. வ. வே. கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி , சரவணன், மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி, திருவண்ணாமலை நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
நகர இளைஞரணி அமைப்பாளரும் நகர மன்ற துணைத் தலைவருமான ராஜாங்கம் நன்றி கூறுகிறார்.