ஆரணி நகர மன்றக் கூட்டம்; கவுன்சிலர்கள் காரசார விவாதம்
ஆரணி நகர மன்ற கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் மன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் 3 வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் மோகன் என்பவர் கள்ளகுறிச்சியில் கள்ளசாராயம் குடித்து இதுவரையில் 60 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு கூட்டத்தில் நினைவு அஞ்சலி செலுத்தபட்டதா எனவும் பள்ளிகூடத் தெருவில் உள்ள சாலை மிகவும் மோசமடைந்து கல்வெட்டு பழுதடைந்து. எப்போது விபத்து ஏற்படுமோ உள்ளன. பல கூட்டத்தில் இது சம்மந்தமாக பேசியுள்ளேன். அதிமுக எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரனிடம் கேட்டு எம்.எல்.ஏ நிதி பெற்று பணி தொடங்கலாம் என ஆணையர் சரவணனை அழைத்த போது வர மறுத்துவிட்டார் என ஆவேசமாக பேசியனார்.
அப்போது குறுக்கீட்ட நகர மன்ற தலைவர் மணி அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துகுடிசம்பவத்தில் 13 பேரை குருவி சுடுவது போல் சுட்டீர்கள் என கூறி கார சார விவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மீண்டும் குறுக்கீட்ட நகர மன்ற தலைவர் மணி பள்ளிகூடத் தெருவில் உள்ள கல்வெட்டை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளபடும் என கூறினார்.
மேலும், பல உறுப்பினா்கள் குப்பைகளை அகற்ற வேண்டும், குடிநீா் விநியோகம் சீராக நடைபெற வேண்டும், மின்விளக்கு வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்துப் பேசினா்.
கள்ளக்குறிச்சியா ? தூத்துகுடியா ? என தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆரணி நகர மன்ற கூட்டத்தில் காரசார விவாதத்தால் இறுதியில் தீர்மானம் வாசிக்கபடாமல் நகராட்சி கூட்டத்தை முடித்தனர். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததைக் கண்டிக்கும் விதமாக, அதிமுக உறுப்பினா்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனா்.