ஆரணியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி: 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஆரணியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

Update: 2022-06-28 13:07 GMT

சிலம்பம் போட்டியில் 6 வயது முதல் 20வயது மாணவ மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிகாட்டி அசத்தினார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் கோட்டை மைதானத்தில் ஆரணி கோட்டை சிலம்பம் விளையாட்டு அமைப்பு சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. நந்தகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆரணி நகர மன்ற துணை தலைவர் பாரிபாபு பங்கேற்றார்.

இதில் காஞ்சிபுரம் வேலூர் திருவண்ணாமலை விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட சிலம்பம் வீரர்கள் பங்கேற்றனர். மேலும் சிலம்பம் போட்டியில் 6 வயது முதல் 20வயது மாணவ மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிகாட்டி அசத்தினார்கள்.

மாவட்ட சிலம்பம் சங்க பொறுப்பாளர்கள் தெரிவிக்கையில், தற்போது வளர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் செல்போனில் முழுமையாக அர்பணித்து தங்களுடைய எதிர்காலத்தை வீணடிக்கின்றனர் இதனால் தமிழர்களின் பாரம்பரியமான கலையாகவும் தற்காப்பு கலையாகவும் விளங்கும் சிலம்பாட்டம் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த போட்டியை நடத்தியதாக தெரிவித்தனர்.

இறுதியில் வெற்றி பெற்ற சிலம்பாட்ட வீரர்களுக்கு ஆரணி நகர மன்ற துணைதலைவர் பாரிபாபு பரிசுகளை வழங்கினார். இந்நிழ்ச்சியில் லோகநாதன் கவுன்சிலர்கள் விநாயகம், பானுப்பிரியா, பாரதிராஜா, தேவராஜ் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News