கோயில்களில் சுவாமி தரிசனம் செய்த இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் சுவாமி தரிசனம் செய்த எஸ் ஏ சந்திரசேகர்.;
திரைப்பட இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.
பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள திருமணி சேறையுடையார் சிவன் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர், சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
முன்னதாக, ஆரணியில் பிரசித்திப்பெற்ற புத்திர காமேட் டீஸ்வரர் கோயிலில் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர். வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், கோ பூஜை செய்து வழிபட்டார்.
அப்பொழுது அங்கிருந்த செய்தியாளர்கள் ஆரணிக்கு திடீரென வந்ததற்கான காரணத்தைக் கேட்டபோது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களை இரண்டு நாட்கள் தரிசனம் செய்வதற்காக வந்துள்ளேன்.
மாசி மகம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிவனை தரிசித்து அவரது ஆசியைப் பெற வந்துள்ளேன். நடிகர் விஜய் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு அவரைப் பற்றிய கேள்வியை அவரிடமே கேளுங்கள் என கூறினார்.
மீண்டும் செய்தியாளர்கள் தமிழக அரசியலில் சினிமா நடிகர்களை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? நடிகர் விஜயகாந்த், சீமான் ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர், இது குறித்து உங்களது கருத்து என்ன கேட்டபோது கருத்து கூற விரும்பவில்லை, போகலாமா என்று தன்னுடன் வந்தவர்களை கேட்டு அவசரமாக கிளம்பினார்.