முதுகில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Amman Kovil -கங்கை அம்மன் திருவிழாவில் முதுகில் அலகு குத்திய பக்தர்கள் அந்தரத்தில் பறந்தவாறு அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

Update: 2022-08-22 00:45 GMT

முதுகில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

Amman Kovil -ஆரணி அருகே ஆக்ராபாளையம் கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் திருக்கோயிலில் ஆடி திருவிழா மற்றும் அம்மனுக்கு கூழ் வார்த்தல் உற்சவம் நடைபெற்றது. நேற்று பெண்கள் தங்கள் குடும்பத்துடன் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து பல்வேறு வேடமிட்டும் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கொண்டு அறுவடை எந்திரம், பொக்லைன் எந்திரம், வேன், சாமி தேர் ஆகியவைகளை இழுத்து வந்தனர். பக்தர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு அந்தரத்தில் பறந்தவாறு சென்று அம்மனுக்கு பரவசத்துடன் மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செய்தனர்.  அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் திருத்தேர் திருவீதி உலா நேற்று இரவு நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். திருவிழாவில் மருத்துவ குழுவினர், காவல் துறையினர், மின்சார துறை, வருவாய்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News