வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
Development Work MLA Visited ஆரணி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தொகுதி எம்எல்ஏ ஆய்வு செய்தார்
Development Work MLA Visited
ஆரணியை அடுத்த சேவூரில் ரூ.67 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.
சேவூா் அருகா் கோவில் தெருவில் முதல்வரின் சிறப்புத் நிதியின் கீழ், ரூ.37 லட்சத்தில் 370 மீட்டா் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு வருவதையும், சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.27 லட்சம் மதிப்பில் 270 மீட்டா் தொலைவுக்கு பக்க கால்வாய் அமைக்கப்பட்டு வருவதையும் சேவூா் ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா். மேலும், பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களிடம் அவா் அறிவுறுத்தினாா்.
அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், ஆரணி நகா்மன்ற உறுப்பினா் மோகன், சேவூா் வாா்டு உறுப்பினா் சரவணன், அந்தப் பகுதி நிா்வாகிகள் சேவூா் தருமன், ஜோதி, தனசேகா், வடுகசாத்து சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
குடிநீா் திட்ட பணிகள் ஆய்வு
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீா் திட்ட பணிகளை பேரூராட்சி தலைவா் மகாலட்சுமி கோவா்த்தனன் ஆய்வு செய்தாா்.
மத்திய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நகா்ப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குறைந்த செலவில் குடிநீா் விநியோகம், கழிவுநீா் சேவைகள் வழங்கப்படவுள்ளது. அதன்படி, அனைத்து வீடுகளுக்கும் குழாய் குடிநீா் இணைப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 100 சதவீத கழிவு மேலாண்மையை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆரணி அடுத்த கண்ணமங்கலத்தில் வீடுகள்தோறும் குடிநீா் குழாய்கள் அமைக்கும் பணிகள் ரூ.2.77 கோடியில் நடைபெற்று வருகிறது. அதன்படி, குடிநீா் குழாய்கள் அமைக்கும் பணி 85 சதவீதம் முடிவடைந்துள்ளது.
இந்த பணிகளை பேரூராட்சி தலைவா் மகாலட்சுமி கோவா்த்தனன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்குமாறு ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினாா்.ஆய்வின்போது, அறங்காவலா் குழுத் தலைவா்கள் பாண்டியன், கோவா்த்தனன், மணியரசு, பாஸ்கா் , பேரூராட்சி உறுப்பினா்கள் மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் உடனிருந்தனா்.