திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரியில் துணை சபாநாயகர் ஆய்வு

திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரியில் துணை சபாநாயகர் ஆய்வு;

Update: 2021-06-05 13:45 GMT

 சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தலா 10கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு திரவ ஆக்ஸிஜன் சேமிப்பு அலகினையும், ஆக்ஸிஜன் சேமிப்பு அறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்பு அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருத்துவ உபகரணங்கள்,உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த விரிவான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அண்ணாதுரை, மற்றும் அரசு மருத்துவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News