சேத்துப்பட்டில் கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
சேத்துப்பட்டு தாலுகா, வட்டார மகளிர் திட்ட அலுவலகத்தில் கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;
திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்துப்பட்டு தாலுகாவில் வட்டார மகளிர் திட்ட அலுவலகத்தில் கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தடுப்பூசியின் பயன்கள், முகக்கவசத்தின் அவசியம், சமூக இடைவெளி ஆகியன குறித்து வட்டார மருத்துவ அலுவலர் திரு. மணிகண்ட பிரபு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுத்துரைத்தார். விழாவில் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.