ஆரணியில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆரணியில் டிஎஸ்பி தலைமையில் நடைபெற்றது

Update: 2021-08-25 05:23 GMT

ஆரணியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி குறித்த ஆலோசனைகூட்டம் 

ஆரணி நகர காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில் நகர பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆரணி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோடீஸ்வரன், பேசும்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, குழுவாக சுவாமி வழிபாடு நடத்துவதை தவிர்க்கும் பொருட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க கூடாது. அவரவர்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும். கோயில்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய இந்து முன்னணி, பாரதிய ஜனதா பிரமுகர்கள் எங்களுக்கு சொந்தமான இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவோம் என தெரிவித்தனர். 

இக்கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக வாங்கிக்கொண்ட நகர காவல் ஆய்வாளர், அவர்கள் கோரிக்கைகளை மாவட்ட கண்காணிப்பாளருக்கு அனுப்பிவைத்து தக்க முறையில் தீர்வு காண ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News