ஆரணியில் வரும் 15ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம்

ஆரணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் 15ந் தேதி நடைபெறுகிறது.;

Update: 2022-03-11 23:45 GMT

ஆரணி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமுத்தூர் ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் ஆரணி நகராட்சி சாலையில் உள்ள அரிமா சங்க சுகாதார வளாகத்தில் வருகிற 15-தேதி  ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் நடக்கிறது. 

இந்தக் குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயன் அடையுமாறு ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News