ஆரணியில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2023-10-20 11:33 GMT

சீர்வரிசை பொருட்களை வழங்கிய ஆரணி எம்பி விஷ்ணு பிரசாத், மாவட்ட செயலாளர் தரணி வேந்தன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த சமுதாய வளைகாப்பு விழாவிற்கு மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் தலைமை வகித்தார்.

தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன், ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினர் விஷ்ணு பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் பேசுகையில் பெண்கள் கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே மருத்துவ முகாம்களில் சத்துணவு பெட்டகங்களை கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இது போன்ற சமூக வளைகாப்பு நிகழ்ச்சிகளை தமிழக அரசு நடத்துவதினால் கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவத்திற்கு தங்களை மனதில் தயார்படுத்திக் கொள்கிறார்கள் என பேசினார்.

மேற்கு ஆரணி ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், ஆரணி ஒன்றிய குழு தலைவர் கனிமொழி சுந்தர் மற்றும் கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி ஆகியோர் பரிசுப் பொருட்களை வாழ்த்தி வழங்கினார்கள்.

மேலும் நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையாக தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம், 5 வகை உணவுடன் மதிய உணவு வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் பயன்பெறும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் சுகாதாரத்துறை மூலம் அரசால் வழங்கப்படுகிறது. கர்ப்பகால முன்பின் பராமரிப்பு, குழந்தைகளுக்கு உணவூட்டும் முறைகள், குழந்தை வளர்ப்பு, தடுப்பூசிகள் போன்ற பல தகவல்கள் குறித்து கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளர் அமைப்பு உறுப்பினர் அன்பழகன் மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி நகர மன்ற தலைவர் மணி ஒன்றிய செயலாளர் மாவட்ட குழு உறுப்பினர்கள் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரசாத் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News