ஆரணியில் 12 வயது மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது;

Update: 2022-03-16 13:32 GMT
ஆரணியில் 12 வயது மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

12 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது

  • whatsapp icon

தமிழக அரசு 12 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. அதன்படி ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு முதல் பயிலும் மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.

முகாமுக்கு தலைமைஆசிரியை தாமரைச்செல்வி தலைமை  வகித்தார்.  எஸ்.வி. நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதா மேற்பார்வையில் நகராட்சி சுகாதார நலப் பணியாளர்களும், செவிலியர்களும், மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனர்.


Tags:    

Similar News