ஆரணியில் இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு

Tiruvannamalai District -ஆரணியில் இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டும் பணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2022-09-14 01:14 GMT

இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு  மேற்கொண்டார்.

Tiruvannamalai District -திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர பகுதியில் உள்ள மில்லர்ஸ் சாலை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் மற்றும் வேலப்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் ஆகிய 2 முகாம்களை சேர்ந்த 111 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டும் பணி ரூ.5.56 கோடி மதிப்பில் தச்சூர் சமத்துவபுரம் அருகே நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கலெக்டர் பா.முருகேஷ், அரசுத்துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதிக்குள் இப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். மழைக்காலம் என்பதால் கட்டுமான பணி பாதிக்க கூடாது. அதனால் மழைக்காலத்திற்கு முன்பாகவே விரைந்து பணிகளை முடித்து விட வேண்டும் என உத்தரவிட்டார்.

பின்ன்னர் செய்தியாளர்களிடம் கலெக்டர் பா.முருகேஷ் கூறுகையில்

ஆரணியில் தனித்தனியாக இயங்கி வந்த இரண்டு அகதிகள் முகாம்களை இடித்துவிட்டு ஒருங்கிணைந்த இலங்கை தமிழர்கள் குடியிருப்பு பகுதி தச்சூர் சமத்துவபுரம் அருகே ரூ.5.56 கோடி மதிப்பில் 111 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. சேதமடைந்த குடியிருப்பு வீடுகளை பராமரிக்க ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 100 வீடுகளில் 82 வீடுகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலர் வீடுகளை விற்று விட்டு வெளியே சென்று உள்ளனர். அது போன்ற உள்ள வீடுகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது என்றார்.

மேலும் ஆரணியில் உள்ள ஒரு தனியார் சைவ உணவகத்தில் பார்சல் உணவில் எலி தலை இருந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ஆரணியில் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே இங்குள்ள அனைத்து உணவகங்களிலும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது அனைத்து உணவகங்களிலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் தரமற்ற உணவு வழங்கிய உணவகம் 'சீல்' வைக்கப்படுமா எனக் கேட்ட பொழுது முதலில் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் அதன் பின்னர் சீல் வைக்கப்படும் என பதிலளித்தார்.

ஆய்வின் போது ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, தாசில்தார் ஜெகதீசன், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சபிதா, திலகவதி, ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் கோவேந்திரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் ஊழியர்கள் உடனிருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News