சேத்துப்பட்டில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்

சேத்துப்பட்டில் வேளாண் வணிகத் துறை சார்பில் உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Update: 2021-07-17 14:23 GMT

சேத்துப்பட்டில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார் 

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேத்துப்பட்டு பகுதியில் புதிய உழவர் சந்தை அமைக்கப்படுவதால் குறைந்த விலையில் காய்கறிகள் பழங்கள் கிடைக்க வழிவகை ஏற்படும்.

சுற்று வட்டாரத்திலுள்ள 76 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் உற்பத்தி செய்து வரும் காய்கறிகளை நேரடியாக குறைந்த விலையில் விற்பனை செய்யலாம்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டார். இந்த நிறுவனம் 2018ஆம் ஆண்டு இந்திய கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இந்நிறுவனத்தில் ஆயிரம் விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர். மணிலா விலை பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது.

Tags:    

Similar News