ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட உடற்பயிற்சி மையத்தை நகர் மன்ற தலைவர் ஆய்வு

ஆரணியில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட உடற் பயிற்சி மையத்தை நகர மன்ற தலைவர் ஏ.சி மணிஆய்வு செய்தார்.;

Update: 2022-03-31 13:00 GMT

உடற் பயிற்சி மையத்தை நகர மன்ற தலைவர் மணி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சி சாலையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டபட்ட உடற்பயிற்சி மையத்தை நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

விரைவில் திறப்பு விழா செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறிய நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி செய்து ஆய்வு மேற்கெண்டார்.

அதனையடுத்து நகர ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கால்வாய் பணிகளை நகர மன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டு தரமாகவும் விரைவாகவும் பணியை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி பொறியாளர் ராஜ விஜய காமராஜ் கவுன்சிலர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News