சாலை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

ஆரணி அருகே தரமான சாலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-03 03:35 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காட்டேரி ஊராடட்சிக்குபட்ட திருவாழிநல்லூர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

மேலும் இதே பகுதியில் உள்ள புதிய செங்குந்தர் தெருவில் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர். நெசவு தொழிலை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். மேலும் இந்த திருவாழிநல்லூர் கிராம புதிய செங்குந்தர் தெருவில் சாலை போடுவதற்கு பணி தொடங்கப்பட்டன. இதனையடுத்து அதே பகுதியை ராமமூர்த்தி என்பவர் சாலை பகுதியில் தனக்கு சொந்தமாக இடம் இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் சாலை போடு வதற்கு தடை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சாலை பணி நிறுத்தப்பட்டதாக தெரிகிறது மேலும் இது தொடர்பாக புதிய செங்குந்தர் தெரு வாசிகள் ஆரணி தாலுகா அலுவலக ஜமாபந்தி நிகழ்வு மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் புகார் மனு அளித்துள்ளனர்.

மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆரணி செய்யாறு சாலை மாமண்டூர் கூட்ரோடு அருகே சாலையின் குறுக்கே இரு பக்கமும் கயிற்றால் கட்டி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் விசாரணைமேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஆரணி அருகே பொதுமக்கள் சாலையின் குறுக்கே கயிற்றைசாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஆரணி செய்யாறு சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News