ஆரணி கடைவீதியில் சோதனை: 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ஆரணி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நடந்த சோதனையில் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;
ஆரணி நகராட்சி எல்லைக்குட்பட்ட காந்தி ரோடு, சத்தியமூர்த்தி ரோடு மற்றும் ராமகிருஷ்ணாபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பதுக்கல் குறித்து நகராட்சி ஆணையாளர் தமிழ்செல்வி தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் துப்புரவு ஆய்வாளர் மதனராசன், களப்பணி உதவியாளர் சரவணக்குமார் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு அப்போது பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் 50 கிலோ எடை கொண்டுள்ள பிளாஸ்டிக்குகளை பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.