திருவண்ணாமலை அருகே விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

திருவண்ணாமலை அருகே விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பு, பால் உற்பத்தி பெருக்கம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2022-07-10 07:36 GMT

முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு பற்றி அறிவுரை வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஆத்தூரை கிராமத்தில் கால்நடை விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பு பால் உற்பத்தி பெருக்கம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஆத்தூரை கிராமத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இங்கு விவசாயம் சார்ந்த தொழிலாக ஆடு மாடு வளர்ப்பு செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பு பால் உற்பத்தி பெருக்கம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் மாடு வளர்ப்பு பால் உற்பத்தி பெருக்கம் குறித்து கால்நடை மருத்துவர் ஆதித்யன் கூறும் போது மாடுகளுக்கு குடல் புழு நீக்கம், குடல் புழுவாள் ஏற்படும் தீமைகள், குடல்புழுவின் தாக்கத்தின் அறிகுறிகள், குடல் புழு தடுப்பு முறைகள், பண்ணை மேம்பாட்டு சேவைகள் குறித்து எடுத்துரைத்தார்.

பால் கொள்முதல் முதுநிலை அலுவலர் குமார், அலுவலர்கள் லட்சுமணன், ஏழுமலை மற்றும் விவசாயிகள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News