சேத்துப்பட்டு அருகே மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

சேத்துப்பட்டு பகுதியில் செய்யாற்று மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-06-11 08:05 GMT

மாதிரி படம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் செய்யாற்று படுகையில் மணல் கடத்துவதாக புகார் வந்ததையடுத்து சேத்துப்பட்டு தாசில்தார் பூங்காவனம், மற்றும் வருவாய்த்துறையினர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 6 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி கொண்டிருந்த 6 பேர் அதிகாரிகளை பார்த்ததும் வண்டிகளை விட்டு விட்டு தப்பியோடினர். மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News