இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம்
ஆரணியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்
இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைப்பயணம் பிரச்சாரம் மாவட்டத்தில் தொடர்ந்து ஒவ்வொரு கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது.
ஆரணி அடுத்த ஒண்டி குடிசை, மாரப்பன் தாங்கள் உள்ளிட்ட கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளி சார்பில் கிராமம்தோறும் நடைபெற்று வருகிறது. இதனை ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் தொடங்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயசீலி மற்றும் கிராம மக்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கலைக்குழுவினர் பாடல் பாடியும் நாடகம் நடத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.