திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறியும் முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறியும் முகாம் நடைபெற்றது.;

Update: 2022-03-24 06:55 GMT

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறியும் முகாம் நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் ஆரோக்கியமான குழந்தைகள் கண்டறியும் முகாம் நடந்தது.

மேற்கு ஆரணி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி, கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நரேந்திரன், சுகாதார ஆய்வாளர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளராக கண்ணமங்கலம் பேரூராட்சித் தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், துணை தலைவர் குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் 6 வயது வரை உள்ள குழந்தைகளின் உயரம், எடை கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஆரோக்கிய குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சுமதி, ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் உள்பட கிராம சுகாதார செவிலியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News